வைரலாகும் ஷங்கர் - ராம் சரண் படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள்
இயக்குநர் ஷங்கர் -ராம் சரண் இணைந்துள்ள ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி நடந்த இப்படத்தின் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இயக்குநர் ராஜமெளலி, சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். 170 கோடியில் இப்படம் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கியது.
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனால், நடிகர் ராம் சரண் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு வந்து நேரடியாக ஆறுதல் கூறினார். இந்த நிலையில், தற்போது ‘ராம் சரண் 15’ படப்பிடிப்புத்தளப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் ரயில்வே ட்ராக்கில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களும் ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bLh5Jw
Post Comment
No comments