கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா - மே.இ.தீவுகள் இடையே இன்று டி 20

கொல்கத்தா: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் கொல்கத்தாவில் இன்று இரவு நடைபெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RHExlGv
No comments