Breaking News

நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது

சென்னை: நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், 142 நாட்களுக்குப்பின் கடந்த 1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ItFnVS2
via

No comments