‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் விழிப்புணர்வு: நாளை முதல் ‘பள்ளிகளில் சுகாதாரம்’ தலைப்பில் ஒளிபரப்பாகிறது
‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் பிப்.15-ம் தேதி தொடங்கியது. இது தொடர்ந்து 5 வாரங்கள் – 5 தலைப்புகள் – 15 பகுதிகள் கொண்ட நிகழ்வுகளாக ஒளிபரப்பாக உள்ளது.
கடந்த வாரம் ஒளிபரப்பான முதல் பகுதியில், கரோனா, ஒமைக்ரான் தொற்றுகளின் தாக்கம், முகக் கவசம் அணிவதன் அவசியம், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், பயணங்களின்போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், ஒவ்வொரு பருவ காலத்திலும் பரவும் தொற்றுநோய்கள், இயற்கையான பொருட்களில் நிறைந்துள்ள சத்துகள், வயிற்றுப்போக்கு எதனால் உண்டாகிறது உள்ளிட்ட பல சுகாதார வழிகாட்டுதல்கள் ஒளிபரப்பாகின. நாளை (பிப்.21) முதல் இரண்டாம் பகுதி ‘பள்ளிகளில் சுகாதாரம்’ எனும் தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oCckNSY
via
Post Comment
No comments