Breaking News

வட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதால் கவனமாக இருக்க வேண்டும்: பொதுமக்களுக்கு சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக ஒருவர்கூட கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெறவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 20 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா வைரஸ் மரபணு மாற்றம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது. கரோனா குறித்து பல நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்தாலும், வட மாநிலங்களில் சில இடங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. டெல்லியில் ஒரு நாளுக்கு கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 300 -ஆக அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ekMI2FJ
via

No comments