Breaking News

'அமித் ஷா வந்துசென்ற பிறகுதான் புதுச்சேரியில் இந்தி திணிப்பு நடக்கிறது' - நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் புதன்கிழமை மாலை ஜிப்மர் எதிரில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் தலைமை தாங்கிய போராட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாராயணசாமி கூறியதாவது: ‘‘ஜிப்மரில் இனி வரும் காலங்களில் இந்தி தான் பிரதான மொழியாக வரப்போகிறது. அதற்காகத் தான் ஜிப்மரில் இந்தியை திணித்துள்ளனர். மருந்து பதிவு செய்வது, நோயாளிகளின் விவரக்குறிப்புகள் எழுதுவது என அனைத்தும் முன்பு ஆங்கிலத்தில் இருந்தது. இனிமேல் அவை இந்தியில் தான் இருக்கும்.

ஜிப்மர் மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தான் வருகின்றனர். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தது. அதனை எதிர்த்து நாங்கள் கடிதம் எழுதினோம். தற்போது ஆளுநர், ஜிப்மரில் ஆய்வு மேற்கொண்டுவிட்டு, முழுமையாக இந்தி மொழி இல்லை என்று தவறான தகவலை பரப்புகிறார். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்கிறார். அவர் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஆனால் முரண்பாடாக அவர் இந்திக்கு ஆதரவாக இருக்கிறார். தவறான தகவலை பரப்பும் ஆளுநர் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lix86zA
via

No comments