Breaking News

கோவை | சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிய உளவுத்துறையை பலப்படுத்த வலியுறுத்தல்

கோவை: கோவை மாநகரில் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில், மாநகர காவல்துறையின் உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் அரசுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு எனப்படும் உளவுத்துறை (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகியவை முக்கியமானதாகும். உளவுத்துறையின் சார்பில், மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்.ஐக்கள், 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் என மொத்தம் 45 பேருடன் இப்பிரிவு இயங்குகிறது. சிறப்பு நுண்ணறிவுப் பிரிவின் சார்பிலும் மாநகரின் 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். இதற்கும் உதவி ஆணையர் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mbOcGEA
via

No comments