Breaking News

2022-ம் ஆண்டில் மெட்ரோ ரயிலில் 6 கோடி பேர் பயணம் செய்தனர்

சென்னை: சென்னையில் முதல் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, சென்னை விமான நிலையம்-விம்கோ நகர் வரை முதல் வழித்தடத்திலும், பரங்கிமலை-சென்ட்ரல் வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தற்போது தினசரி 2.30 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆண்டு (ஜனவரி முதல் டிசம்பர் வரை) மொத்தம் 6.09 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு (2022) அதிக மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பேரும், 2019-ம் ஆண்டில் 3 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பேரும் பயணம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mdy0nwK
via

No comments