இப்படியொரு மோசமான ரெக்கார்டா! சூர்ய குமார் கிரிக்கெட் வாழ்க்கையில் சோதனை கட்டம்!
தொடர் ஒன்றில் தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் இந்தியாவின் 360 வீரர் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.
வாழ்க்கையில் ஒவ்வொருக்கும் ஒரு சோதனையாக காலகட்டம் வரும். நிச்சம் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்ய குமாருக்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோதனையான காலகட்டம் இதுதான். எப்படியெல்லாம் ஒருவர் புகழின் உச்சிக்கு செல்ல முடியுமோ அதேபோல் தோல்வியால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். அப்படியான விமர்சனம் காலகட்டத்தை அவரே தன்னுடைய மோசமான ஆட்டத்தால் உருவாக்கிக் கொண்டுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் ராஜாவாக இருந்தவர்
டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அடித்தபடியாக அதிக டி20 சதங்களை அடித்த இந்திய வீரராக இருக்கிறார்.
மிகக்குறைவான டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து ஐசிசியின் நம்பர் 1 டி20 வீரராகவும் ஜொலித்து வருகிறார். 46 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களை அடித்திருக்கும் அவர், டி20யில் 46 சராசரியுடன் இருந்துவருகிறார். ஆனால், என்னதான் டி20 போட்டிகளில் ஜொலித்து வந்தாலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளாமல் சொதப்பியே வருகிறார்.
மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக்!
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்துள்ளார்.
1. கடந்த மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
2. கடந்த மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் அதே மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தார்.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அவர் டக் அவுட் முறையில் அவுட்டாகி இருப்பது விமர்சனத்துக்குள்ளான நிலையில்,
3. இன்று (மார்ச் 22) சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் டக் அவுட் முறையில் வீழ்ந்துள்ளார். இன்று ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் போல்டானார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமார் இணைந்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MJOzqZ2
via
No comments