Breaking News

பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதம் ஆகிறது - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: நீட் தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தேர்வு முடிவு எப்போது என்று மே 7-ம் தேதி மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிந்தது. இத்தேர்வை 8.30 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்.10 முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இதர பணிகள் நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zCOYKTf
via

No comments