தூத்துக்குடி | மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் அலுவலகத்தில் புகுந்து விஏஓ கொலை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மணல் கொள்ளை குறித்து காவல் துறையில் புகார் கொடுத்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்தில் புகுந்து 2 நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவானவரை போலீஸார் தேடி வருகின்றனர். உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக (விஏஓ)பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் சாய்ந்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A4CUeM2
via
Post Comment
No comments