படமணடன தரவரசயல சடவக - ஷரக ஜடகக 3-வத இடம
புதுடெல்லி: சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் ஆயிரம்புள்ளிகள் கொண்ட இந்தோனேஷியா ஓபன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
காமன்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ள சாட்விக் -ஷிராக் ஜோடியானது இந்தோனேஷியா ஓபன் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை நேர் செட்டில் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் ஆயிரம் புள்ளிகள் கொண்ட தொடரின் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனையையும் சாட்விக், ஷிராக் ஆகியோர் படைத்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vjBdwsq
No comments