Breaking News

Tamil News Today Live: அமரககவல பரதமர மட - எலன மஸக சநதபப..!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த யோகாசன நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை!

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கி நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு, மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு..!

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று நியூயார்க்கில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலோன் மஸ்க்-ஐ சந்தித்தார். இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாக தெரிவித்திருக்கும் மஸ்க், பிரதமர் மோடி, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். மேலும் அடுத்த ஆண்டில் தான் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார் மஸ்க்.



from India News https://ift.tt/ATYOia7

No comments