Breaking News

``சனாதனம்... பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு” - சாமியார் விவகாரத்தில் திருமாவளவன் கடும் தாக்கு

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் பங்கேற்றன. இதில் கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் சனாதனம், இந்திய கூட்டணி மற்றும் அ.தி.மு.க மீதான விமர்சனம் என அவரின் பேச்சில் கவனம் பெற்றவை இங்கே!

திருமாவளவன்

``மத்திய அரசின் திட்டமென்பது குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒரு சதித்திட்டம்” என பேச ஆரம்பித்த திருமா, தொடர்ந்து ``சனாதானத்தை ஒழிப்போம் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு ஒரு சாமியார் தலையை வெட்டினால் 10 கோடி என அறிவிக்கிறார். இந்த அறிவிப்பு என்பதே தீவிரவாதம்தான். சனாதனம் என்பது எவ்வளவு பயங்கரவாதம் நிறைந்த கோட்பாடு என்பதற்கு இந்த அறிவிப்பே ஒரு சான்று. அமைச்சர் உதயநிதி தி.மு.க தலைவர் ஸ்டாலினின் பிள்ளை, அதுதான் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பிரச்னை.

I.N.D.I.A கூட்டணியிலிருந்து தி.மு.க-வை கழற்றிவிட வழி தேடுகிறார்கள், இனி I.N.D.I.A கூட்டணியை எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது. I.N.D.I.A கூட்டணி உருவாகிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மகத்தான பங்கு உண்டு என்பதை கூட்டணி தலைவர்களே அறிவார்கள். தி.மு.க இல்லாமல் I.N.D.I.A கூட்டணி இல்லை. ஆகவேதான் தி.மு.க-வை குறிவைத்து விமர்சிக்கிறார்கள்.

திருமாவளவன் - எடப்பாடி பழனிசாமி

இது 100% வாக்கு வங்கிக்கான வேலை. ஆர்.எஸ்.எஸ் வலையில் சிக்கிவிடாமல் இந்துக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸை கடுமையாக சாடிய திருமா, ஒருகட்டத்தில் அ.தி.மு.க-வையும் விமர்சித்தார். ``தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு முட்டு கொடுப்பது அ.தி.மு.க தான். காணாமல் போவதற்கான எல்லா வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க எங்கே இருக்கிறது என தேடும் நிலை வந்துவிடும். பா.ஜ.க-வே அ.தி.மு.க-வை காலி செய்துவிடும்” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY



from India News https://ift.tt/3r4vupH

No comments