Breaking News

2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்ப்பு!

லண்டன்: எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் என ஐந்து விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரிட்டனில் இருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு இந்த விளையாட்டு பட்டியலை உறுதி செய்துள்ளதாகவும். இது தொடர்பாக ஒலிம்பிக் திட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VftNp94

No comments