Breaking News

IND vs AUS 2-வது டி20 | பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் அசத்தல் - இந்தியா 44 ரன்களில் வெற்றி

திருவனந்தபுரம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்களில் வெற்றி பெற்றுள்ளது.

236 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. மேத்யூ ஷார்ட் 19 ரன்களில் முதல் விக்கெட்டானார். கடந்த போட்டியில் சதமடித்த ஜோஷ் இங்கிலிஷ் இம்முறை 2 ரன்களில் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 12, ஸ்மித் 19 ரன்கள் என ஆஸ்திரேலிய அணியின் இந்திய பவுலர்கள் எளிதாக வீழ்த்தினர். இதன்பின் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட் இணைந்து ஓரளவுக்கு அணியை மீட்டெடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். டிம் டேவிட் 37 ரன்களில் வீழ, ஸ்டோய்னிஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q7zVDkZ

No comments