Breaking News

`இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முதல்வர் ஸ்டாலினா?‘ - கனிமொழி எம்.பி. பதில்

தி.மு.க.மகளிர் அணி சார்பில், கலைஞர் கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் நடைபெறும் 'கலைஞர் 100 வினாடி வினா' போட்டியின் மண்டல அளவிலான இரண்டாம் கட்ட நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று (30/11/2023) நடைபெற்றது. 'வினாடி வினா' போட்டியை கனிமொழி எம்.பி தொடங்கிவைத்து, போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு, விருதுநகர் தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஆறுதல் பரிசு

நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசும்போது, "இந்த வினாடி வினா நிகழ்ச்சி மனதிற்கு மகிழ்ச்சியையும், நிறைவை தரக்கூடியது. இந்த போட்டியில் பங்கேற்பாளர்களின் உழைப்பு, முயற்சிகளை காணும்போது, எதிர்காலம் திராவிட இயக்கச் சிந்தனைகள் உள்ளதாகவும், தமிழ் பெருமையும், வரலாற்றையும் புரிந்துக்கொண்டுள்ள நமது பிள்ளைகளின் கையில் இருக்கப் போகிறது என்ற நல்ல நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. இரண்டு லட்சம் போட்டியாளர்களைக் கொண்டுள்ள இந்தப்போட்டியில், இந்த சுற்றுவரை வந்துள்ள அனைவருக்கும் பாராட்டுகள்" என்றார்.

கனிமொழி எம்.பி.

தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 மாநில தேர்தல் முடிவுகள் 'இந்தியா' கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கும்" என்றார்.

வினாடி வினா

கனிமொழி எம்.பி.யிடம், 'இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவாரா? எனக்கேள்வி கேட்டதற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் அடுத்து வெகு சீக்கிரத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தலைவர்கள் கலந்தாலோசித்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்பார்கள்" என பதில் கூறினார்‌.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from India News https://ift.tt/UluzEFa

No comments