காஞ்சிபுரத்தில் அம்மா உணவகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. 2015-ல், சுமார் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த உணவகத்தில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் ஆகியோர் உணவு சாப்பிடுவர். இங்கு விலை குறைவு என்பதால், எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் உணவகத்தை மூடிவிட்டு, சென்றுவிட்டனர். நேற்று காலையில் பெண் ஊழியர்கள் உணவகத்தை திறந்தபோது, மேற்கூரை பெயர்ந்து விழுந்திருந்தது தெரியவந்தது. சுமார் 50 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட மேற்கூரையின் உட்பகுதி பெயர்ந்து விழுந்து, மின் விளக்குகள், மின் விசிறிகள் சேதமடைந்திருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RHSiiu
via
No comments