சென்னை வடக்கு சரகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு: விதிகளை மீறியவர்களிடம் ரூ.41.79 லட்சம் அபராதம்

சென்னை வடக்கு சரக செயலாக்க ஆர்டிஓ மூலம், கடந்த ஜூலை மாதத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், விதிகளை மீறிய 238 வாகனங்களுக்கு ரூ.41.79 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிசந்திரன் உத்தரவைத் தொடர்ந்து, ஆர்டிஓ மா.செழியன், வாகன ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் மணலி, பூந்தமல்லி, திருவள்ளூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், விதிகளை மீறிய 238 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Cu6sHb
via
No comments