Breaking News

டிவிஎஸ் நிறுவனம் 50 ஏக்கரில் உருவாக்கிய வனவிலங்கு சரணாலயம்: ஓசூரில் இயற்கையை பாதுகாக்க ஒரு தொலைநோக்கு முயற்சி

தொழிற்சாலை நகரில் பறவைகள், வன விலங்குகளுக்கு ஒரு காட்டை உருவாக்கி, ஓசூரின் இயற்கை எழிலை மீட்டெடுத்து வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.

ஓசூர் மாநகரம், 50 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்து, வனவிலங்குகள் நிறைந்த வனப்பகுதியாக இருந்தது. தற்போது, பெருகிவரும் தொழிற்சாலைகள் ஓசூரின் முக்கிய அடையாளமாக, நிமிர்ந்து நிற்கின்றன. அதிகரித்து வரும் மக்கள் தொகை, மரங்கள் வெட்டப்படுவது, பெருகி வரும் கட்டிடங்கள் ஆகியவற்றால், ஓசூரின் இயற்கை எழில் குறைந்து, வன விலங்குகளின் வாழ்விடம் சுருங்கிவிட்டது. யானைகளும் கூட,அவற்றின் வாழ்விடத்தை தொலைத்துவிட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ixkNKN
via

No comments