அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் திருவிழாவுக்கு பக்தர்கள் நேரில் வர அனுமதியில்லை: காவல் ஆணையர் அறிவிப்பு
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 49-வது வருடாந்திர திருவிழா, இன்று (29-ம் தேதி) தொடங்கஉள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழாவில் நேரில் பங்கேற்க இந்த ஆண்டுபொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. ஆகையால்பொதுமக்களும், பக்தர்களும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு கொடியேற்ற தினமான இன்றும், அடுத்தமாதம் 7-ம் தேதி நடைபெறும் தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் வருவதை தவிர்க்க வேண்டும். பக்தர்கள் இந்நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் நேரடியாக காணலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38ltTV1
via
Post Comment
No comments