இந்திய சீருடையுடன் மீண்டும் மைதானத்திற்குள் நுழைந்த ஜார்வோ
இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான லார்ட்ஸ் டெஸ்ட்டின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர், லீட்ஸ் டெஸ்ட்டின் போதும் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்வோ என்ற ரசிகர் இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் போது இந்தியாவின் சீருடையை அணிந்து கொண்டு சக ஃபீல்டர் போல மைதானத்திற்குள் நுழைந்தார். பின்னர் மைதானத்தில் இருந்த காவலர்கள் மூலம் அவர் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் லீட்ஸில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட்டின் போதும் முழு KIT உடன் ஜார்வோ இந்திய பேட்ஸ்மேன் போல ஆடுகளம் வரை சென்றுவிட்டார். காவலர்கள் அவரை அப்புறப்படுத்த முயன்ற போது ஜார்வோ அடம் பிடித்தபடியே வெளியேற மறுத்தார். நகைச்சுவையான தருணமாக பார்க்கப்பட்டாலும் பாதுகாப்புகளை மீறி ரசிகர் ஒருவர் மீண்டும் மீண்டும் மைதானத்திற்குள் நுழைவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jpcX6q
via
Post Comment
No comments