ஆயுத பூஜைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள்: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் சனி, ஞாயிறு எனதொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையைசொந்த ஊரில் கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் முதல் ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலைக்குப் பிறகு கூட்டம் குவிந்ததால், ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iY0beu
via
Post Comment
No comments