268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை; 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு: இயந்திரங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதம், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதம், 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதம் என மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RBTU06Y
via
Post Comment
No comments