‘புஷ்பா’ படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்: கொண்டாட்டத்தில் ஒட்டுமொத்த படக்குழு
'தாதாசாஹேப் பால்கே' சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022-ல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா திரைப்படம் வென்றுள்ளது.
இது தொடர்பாக 'தாதாசாஹேப் பால்கே' சர்வதேச திரைப்படவிழா ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், " தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள்2022-இல் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றதற்காக 'புஷ்பா: தி ரைஸ்' படத்திற்கு வாழ்த்துகள். படக்குழுவின் கடின உழைப்பும் விடாமுயற்சியும் பலனளித்துள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ‘புஷ்பா’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
2021 டிசம்பர் மாதம் வெளியான தெலுங்கு திரைப்படமான 'புஷ்பா' இந்தி, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி வெற்றிபெற்றது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில்,ராஷ்மிகா , சமந்தா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/jpuWfF9
Post Comment
No comments