Breaking News

அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் | ‘பாலியல் கல்வி’ தான் ஒரே தீர்வு - முன்னாள் நீதிபதி எஸ்.விமலா கருத்து

சென்னை: இந்தியாவில் ‘போக்சோ’ போன்ற கடுமையான சட்டங்கள் இருந்தும்,பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதற்கு காரணம் சட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லாததே என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம் ‘பாலியல் கல்வி தான் இதற்கு ஒரே தீர்வு’ என்கிறார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா.

கடந்த 1972-ம் ஆண்டு இந்தியாவில் சிறைக்காவலில் இருந்த மதுரா என்ற பழங்குடியினப் பெண், மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்நிலைய வளாகத்தில் 2 போலீஸாரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். குற்றம்சாட்டப்பட்டவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்த பிறகு, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் குற்றவியல் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XUWobnd
via

No comments