FIFA WC 2022 | கோல் மழை பொழிந்த பிரேசில் வீரர்கள் - தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்
தோகா: கத்தாரில் நடைபெறும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று பிரேசில், தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த ஆட்டம் தோகாவிலுள்ள ஸ்டேடிடம் 974-ல் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. காயத்தால் ஓய்வில் இருந்த பிரேசில் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் நெய்மர் இப்போட்டியில் களம்கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிரேசில் அதிரடியை கையாண்டது. சொல்லப்போனால் கோல் மழை பொழிந்தனர் எனலாம். முதல் கோலை வினி ஜூனியர் அடித்தார். அவர் ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் அடிக்க, 13வது நிமிடத்தில் நெய்மர் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tCHVh4G
Post Comment
No comments