Breaking News

`ரூ.1,413 கோடி முதல் ரூ.1,700 வரை... இந்தியாவின் பணக்கார, ஏழை எம்.எல்.ஏ-க்கள் லிஸ்ட்’ - ADR அறிக்கை!

இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்.எல்.ஏ. மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms (ADR)) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் பத்து இடங்களில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள்.

டி.கே.சிவக்குமார்

நாட்டின் 20 பணக்கார எம்.எல்.ஏ-க்களில், 12 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 14 சதவிகிதம், பில்லியனர்கள். அதாவது குறைந்தபட்சம் ரூ.100 கோடி சொத்துமதிப்பு கொண்டவர்கள் . இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம், 59 எம்.எல்.ஏ-க்களில் 7 சதவிகித எம்.எல்.ஏ-க்கள் இதில் இடம் பிடிக்கிறார்கள்.

மேலும், இந்தியாவின் எம்.எல்.ஏ-க்களில் முதலிடத்தைப் பிடிக்கும் எம்.எல்.ஏ கர்நாடகாவின் துணை முதல்வராகப் பதவியேற்ற டி.கே.சிவகுமார். இவரின் சொத்து மதிப்பு ரூ.1,413 கோடி. இரண்டாவது இடத்தில் கர்நாடகாவின் சுயேச்சை எம்.எல்.ஏ-வான கே.எச் புட்டஸ்வாமி கவுடா. இவரின் சொத்து மதிப்பு ரூ.1,267 கோடி. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சியின் பிரியா கிருஷ்ணா ரூ.1,156 கோடி சொத்து மதிப்புக் கொண்டவர்.

நிர்மல் குமார் தாரா

இந்தியாவின் மிக ஏழையான எம்.எல்.ஏ பட்டியலில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.வான நிர்மல் குமார் தாரா. இவரால் அறிவிக்கப்பட்ட சொத்து விவரத்தில் ரூ.1,700 மட்டுமே உள்ளது. அவரைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான மகரந்தா முதுலி. இவரின் சொத்து மதிப்பு ரூ.15,000. அவருக்கு அடுத்த இடத்தில் பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் நரிந்தர் பால் சிங் சவுனா. இவரின் சொத்து மதிப்பு ரூ.18,370 எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் அவரது சொத்துக்களின் விவரங்கள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு," "நான் பெரிய பணக்காரனில்லை. நீண்ட காலமாக நான் சம்பாதித்த சொத்துக்கள் இவை. என்னுடைய சொத்துகள் அனைத்தும் என்னுடைய பெயரில், அதாவது தனி நபர் பெயரில் இருக்கிறது. நானும் அதை அப்படியே வைத்திருக்கிறேன்.

பா.ஜ.க - காங்கிரஸ்

எனவே நான் பணக்காரனும் அல்ல, ஏழையும் அல்ல" எனக் குறிப்பிட்டிருக்கிறார். துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் கருத்துக்கு பதிலளித்த கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர் சுரேஷ் குமார்,"காங்கிரஸ் பணக்காரர்களை நேசிக்கிறது. அதனால்தான் பணக்காரர்கள் அங்கே தஞ்சமடைகிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from India News https://ift.tt/m0WR5qM

No comments