குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் வசந்தகுமார் மணிமண்டபம், சிலை இன்று திறப்பு: கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமார் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை திறப்பு விழா இன்று (28-ம் தேதி) நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனருமான எச்.வசந்தகுமார் கடந்தஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதிஉடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல்கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, எச்.வசந்தகுமாரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UT2syO
via
Post Comment
No comments