டிசம்பரில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா மற்றும் விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. படத்தில் விஜய் சேதுபதி வெளிநாடு வாழ் தமிழராக நடித்துள்ளார். சர்வதேச பிரச்னைக் குறித்து படம் பேசப்போகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது என்று விஜய் சேதுபதி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக, செப்டம்பர் மாதம்‘அனபெல் சேதுபதி’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3D07iLi
Post Comment
No comments