மும்பை: திருமணத்துக்கு முன் கர்ப்பம்; கழிவறையில் குழந்தை பெற்று, ஜன்னல் வழியே போட்ட இளம்பெண்!
மும்பை அருகே உள்ள நவிமும்பை உல்வே என்ற இடத்தில் இருக்கும் அடுக்கு மாடிக்கட்டடத்திற்கு கீழே, பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு குழந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை மருத்துவமனையில் சோதித்த போது அது ஏற்கனவே இறந்திருந்தது. குழந்தை கிடந்த கட்டடத்தில் உள்ளவர்களிடம் குழந்தை யாருக்கு சொந்தம் என்று விசாரித்தனர். ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.

கட்டடத்திற்கு வெளியில் இருந்து பார்த்த போது இரண்டாவது மாடியில் ஒரு வீட்டில் கழிவறை ஜன்னலில் கிரில் போடாமல் இருந்தது. உடனே அந்த வீட்டில் இருந்து குழந்தை கீழே போடப்பட்டு இருக்கலாம் என்று கருதி அங்கு சென்று போலீஸார் விசாரித்தனர். வீட்டில் இருந்தவர், வீட்டில் எனது சகோதரரின் 19 வயது மகளும் தங்கி இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு வயிற்று வலி வந்ததாகவும், உள்ளூர் கிளினிக்கிற்கு அழைத்து சென்று மருந்து வாங்கிக்கொடுத்ததாகவும் தெரிவித்தார். அன்று இரவு திடீரென கழிவறைக்கு சென்ற அப்பெண் வயிற்று வலியால் உள்ளிருந்து அழுதார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆட்டோ பிடிக்க சென்றதாகவும் தெரிவித்தார்,
ஆட்டோவுடன் வீட்டிற்கு வந்த போது அப்பெண் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அதோடு தனக்கு வயிற்று வழி சரியாகிவிட்டதாகவும் தெரிவித்தார் என்று போலீஸாரிடம் தெரிவித்தார். உடனே அப்பெண்ணிடம் பெண் கான்ஸ்டபிள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் தனது பெரியப்பா மகனுடன் உறவு வைத்துக்கொண்டதால் கர்ப்பமாகிவிட்டதாக தெரிவித்தார். அதோடு 8 மாதம் ஆன பிறகு வயிறு பெரியதாக தெரியாத காரணத்தால் இது குறித்து தனது குடும்பத்தினரிடமோ அல்லது தங்கி இருந்த தனது பெரியப்பா வீட்டிலோ சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

இரவு நேரத்தில் கழிவறையில் குழந்தை பிறந்ததால் அதனை மறைக்க ஜன்னல் வழியாக அதனை வெளியில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு கைது செய்யப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/BRNMJP5
No comments