பாலியல் வன்கொடுமை... தூக்கில் சடலமாகத் தொங்கிய இளம்பெண்! - கொலையாளியைத் தேடும் உ.பி போலீஸ்
உத்தரப்பிரதேசத்தின் நாக்லா ஷிஷாம் கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இளம்பெண் அந்தப் பகுதியிலுள்ள கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண்ணின் தந்தை வேலை நிமித்தமாக மெயின்புரி பகுதிக்குச் சென்றிருந்தார். மேலும் பெண்ணின் தாய் ஆக்ராவுக்குச் சென்றிருந்தார். இதையடுத்து, பெண் வீட்டில் தனியாக இருந்ததாகத் தெரிகிறது.
அப்போது புஷ்பேந்திரா என்பவர் இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, அவரை பாலியல் வன்கொடுமைசெய்திருக்கிறார். பின்னர், இளம்பெண் இது தொடர்பாக வெளியில் சொன்னால் போலீஸில் மாட்டிக்கொள்வோமோ என எண்ணிய அந்த இளைஞர், இளம்பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீஸார், இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொலை தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/T84W7Rw
Post Comment
No comments