Breaking News

குஜராத்: எருமை மாட்டின்மீது மோதி சேதமடைந்த வந்தே பாரத் அதிவிரைவு ரயில்!

மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக வேகமான அதிவிரைவு ரயிலாகக் கருதப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காந்தி நகரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி வைத்து அதில் பயணமும் செய்து பார்த்தார். விமானத்தில் இருப்பது போன்ற வசதிகளைக்கொண்ட இந்த ரயில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இன்று காலை இந்த ரயில் மும்பையிலிருந்து காந்தி நகருக்குச் சென்று கொண்டிருந்தது. ரயில் பட்வா-மணி நகர் ரயில் நிலையங்களிடையே சென்றபோது.. தண்டவாளத்தைக் கடந்த எருமை மாட்டின்மீது மோதியது.

வந்தே பாரத் ரயில்

இதில் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால் ரயில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. விபத்துக்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் ரயிலின் முன்பகுதியில் உடைந்து தொங்கிய பகுதியை அப்புறப்படுத்தினர். மோதிய எருமை மாடு தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. இது குறித்து மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ஜிதேந்திரா கூறுகையில், ``காலையில் வந்தே பாரத் சூப்பர் பாஸ்ட் ரயில் எருமை மாட்டின்மீது மோதியதால் 20 நிமிடங்கள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது."

நாட்டில் எதிர்காலத்தில் இது போன்ற வந்தே பாரத் ரயில்களை அதிக அளவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ரயில் தண்டவாளத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதால் அதிவிரைவு ரயில்களை இயக்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. அதோடு இதற்கு ரயில் தண்டவாளத்தையும் வலுப்படுத்தவேண்டியிருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/rqT5uQj

No comments